நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (10.04.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
மேலும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கிறது.
இதனால், நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
உச்சம் கொடுக்கும் சூரியன்

அதற்கமைய இன்று (10) நண்பகல் 12:11 மணிக்கு நாகவில்லுவ, கல்கமுவ, சீகிரியா, பலுகஸ்தமன மற்றும் மாங்கேணி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |