இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட தமிழர்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Supreme Court of Sri Lanka
By Sathangani
உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா (S. Thurairaja) பதில் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று (07) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்தார்.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன (Padman Surasena) தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பதவியேற்பு நிகழ்வு
இந்தநிலையில் பிரதம நீதியரசர் நாடு திரும்பும் வரை நீதிபதி துரைராஜா பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்