நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..!

Sri Lankan Peoples
By Vanan Dec 12, 2022 06:19 PM GMT
Report

நேர்மைக்கு மகுடம் விருதிற்கு அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது தொடர்பான விடயங்கள் வெளிவந்துள்ளன.

ஊடக அறிக்கை மூலம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் அரச சேவையில் நேர்மையுடன் செயற்படுகின்ற அதேவேளை உரிய கடமைகளுக்கும் சேவைகளுக்கும் மேலதிகமாக பொதுமக்களின் நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்கின்ற அரச ஊழியர்களை கெளரவிக்கும் செயற்பாட்டினை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் முன்னெடுத்துச் செல்கிறது.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்)

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..! | Till Launching Integrity Icon Sri Lanka 2022 23

உலகளாவிய அமைப்பான அகவுண்டபிலிட்டி லெப் (Accountability Lab) அமைப்பின் கருத்தமைக்கப்பட்ட இந்த இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரசாரமானது, தமது சமூக மட்டத்தில் நேர்மைத்திறன் தொடர்பில் நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கி அதனை செயற்படுத்த முனையக் கூடியவர்களை ஆதரிக்க முயல்கிறது.

இப்பிரசாரமானது 2018ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருகிறது. இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் 9ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரசாரமானது உள்ளக மற்றும் வெளிப்புற அழுத்தங்களை தாண்டி ஊழலுக்கு எதிராகவும் தமது தொழில் பணிகளை நேர்மையுடனும் மேற்கொள்ளும் அரச ஊழியர்களை கெளவிக்க முயல்கிறது.

கடந்த ஆண்டு இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரசாரமானது “கொவிட்டைத் தடுப்பதற்காக செயலாற்றும் சாதனையாளர்கள்” எனும் அடையாளத்துடன் கொவிட்-19 தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த செயலாற்றிய முன்கள அரச ஊழியர்களை கெளரவித்தது.

ஆனால் இம்முறை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருதுக்கு விண்ணப்பிக்க மற்றும் பரிந்துரைக்க பொதுத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறது.

நேர்மையான அரச ஊழியர் எனக் கருதும் எவரும் இவ்விருதுக்கு தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதேபோல் பொது மக்களும் நேர்மையான அரச ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களை பரிந்துரைக்க முடியும்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை எதிர்வரும் 2023 ஜனவரி 31ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விண்ணப்பம் மற்றும் கையேட்டினை www.integrityicon.lk எனும் இணையத் தளத்தினூடாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அல்லது 0711295295 / 0763223442 எனும் தொலைபேசியூடாகவோ அல்லது icon@tisrilanka.org எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்பு கொள்வதனூடாகவும் குறித்த விண்ணப்பம் மற்றும் கையேட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.

பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..! | Till Launching Integrity Icon Sri Lanka 2022 23

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தவுடன் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் சுயாதீன நடுவர் குழுவினால் மதிப்பாய்வு மற்றும் நேர்காணல்கள் இடம்பெற்று தகுதிவாய்ந்த இறுதி பத்து விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அதேபோல் 2023 ஜூன் மாதம் இடம்பெறவுள்ள இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருது வழங்கல் நிகழ்வின் போது குறித்த இறுதிப் பத்து விண்ணப்பதாரிகளிலிருந்து ஐந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஐந்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய மற்றும் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் குறைந்தது ஐந்து வருட சேவைக் காலத்தினைக் கொண்ட நிரந்தர அரச ஊழியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது இத்தகுதியுடைய அரச ஊழியர்களை குறித்த விருதுக்கு பரிந்துரைக்கலாம்.

பொதுமக்களின் நலனுக்காக தம்மை அர்ப்பணித்து பணியாற்றக்கூடிய நேர்மையான அரச ஊழியர்களை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கு பரிந்துரைத்து நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் செயற்பாடுகளை தடுக்க கைகோர்க்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனமானது அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது” - என்றுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015