இலங்கையின் திட்டங்களை மையப்படுத்தி டில்வின் - சந்தேஷ் ஜா கலந்துரையாடல்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணிக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவுக்கு தெளிவுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் தில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று முன்தினம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம்
பாரதிய ஜனதா கட்சியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, பொதுச்செயலாளர் டில்வின் சில்வா சமீபத்தில் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் குறித்தும் இதன்போது உரையாடப்பட்டது.

மேலும், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைப் பாதித்த சமீபத்திய புயல் நிலைமை குறித்து பொதுச்செயலாளர் டில்வின் சில்வா வினவியதுடன், அப்பகுதியின் தயார்நிலை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெளிவுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |