ரணிலின் அழைப்புக்கு தமிழர் தரப்பில் இருந்து எதிர்வினை
TNA
M. A. Sumanthiran
Ranil Wickremesinghe
By Vanan
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அடுத்த வாரம் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக குறிப்பிட்ட விடயத்துக்கு தமிழர் தரப்பில் இருந்து எதிர்வினைகள் வந்துள்ளன.
அந்த வகையில் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சிறிலங்கா அராசங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
ரணிலுடன் பேச்சுவார்த்தை
இதன் அடிப்படையில் ரணிலுடன் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.
எனினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்றும்
வகையிலேயே தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட
வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி