இன்று தேசிய துக்க தினமாக பிரகடனம்! தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு அறிவிப்பு
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
Japan
By Kiruththikan
தேசிய துக்க தினமாக பிரகடனம்
ஜூலை 12ஆம் திகதியான இன்றைய தினத்தை தேசிய
துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இன்றைய தினத்தில் நாட்டின் அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு அந்த அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க பொது நிர்வாக உள நாட்டலுவல்கள் அமைச்சு அந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும் இன்றைய தினம் அரசாங்க விடுமுறை தினம் அல்ல என்பதையும் அமைச்சு தெரிவித்துள்ளது .
