மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை - இன்றைய நிலவரம்
Gold Price in Sri Lanka
Sri Lanka
Today Gold Price
India
By Vanan
கடந்த வெள்ளிக்கிழமையுடன் (04) ஒப்பிடுகையில் இன்று (07) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
அந்தவகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 619,332 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 174, 320 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 502 ரூபாவினால் அதிகரித்து 174,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 159,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 450 ரூபா அதிகரித்து 160,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்
தங்க அலகு | தங்க விலை |
ஒரு தங்கம் அவுன்ஸ் | ரூ. 619,332.00 |
24 கரட் 1 கிராம் | ரூ. 21,850.00 |
24 கரட் 8 கிராம் | ரூ. 174,800.00 |
22 கரட் 1 கிராம் | ரூ. 20,030.00 |
22 கரட் 8 கிராம் | ரூ. 160,250.00 |
21 கரட் 1 கிராம் | ரூ. 19,120.00 |
21 கரட் 8 கிராம் | ரூ. 152,950.00 |
YOU MAY LIKE THIS
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்