காலை வேளையில் வாகனம் ஓட்டுபவர்கள் அவதானம்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (16) சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நாட்டின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதிகாலை வேளையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக வீதிப் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், வாகனச் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
[JBOP9VS]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |