சென்னை- டெல்லி அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இடம்பெற்று வருகின்றது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சுப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், இன்று (20) இரண்டு லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும் 67-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மற்றும் சென்னை சுப்பர் கிங் அணி மோதுகின்றன.
தொடர்ந்து, 68-வது லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதுகின்றன.
