அச்சுறுத்தலான தரப்பினரை பழிவாங்கும் அநுர அரசு : மகிந்த குற்றச்சாட்டு
தமக்கு அச்சுறுத்தலாக செயற்படும் தரப்பினரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழிவாங்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தங்காலையில் உள்ள தனது கார்ல்டன் இல்லத்திற்கு சென்றதன் பின்னர் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் புதிய அரசாங்கம் நாட்டை எவ்வாறு ஆட்சி செய்கிறார்கள் என்பது தொடர்பாக மக்களும் எதிர்க்கட்சிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
சிறையில் அடைக்கப்படுவார்கள்
அத்துடன் இந்த அரசாங்கம் பிழையான பாதையில் பயணிக்கும்போது அதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு தனக்கிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த அரசாங்கத்திற்கு எதிராக உள்ள அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதைத் தான் முன்னதாகவே அறிந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மகிந்த ராஸபக்சவின் ஆதரவாளர்கள் அவரைச் சந்திப்பதற்காக தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு தினமும் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
