சிங்கள மக்களின் ஆதரவுடன் கோட்டாபயவுக்கு எதிராக யாழில் போராட்டம்
Jaffna
Gotabaya Rajapaksa
By Theepan
பயங்கரவாத தடை சட்டத்தை இரத்துச் செய்யுமாறும் அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டத்தினை நிறுத்துமாறு கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று யாழ்ப்பாண நகரில் இடம் பெற்றுள்ளது.
குறித்த போராட்டத்தில் லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக பாதுகாப்பு காரணங்களை காட்டி கோட்டபாய ராஜபக்ஷ நீதிமன்றுக்கு வருகை தராமை கண்டனத்துக்குரியது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கம் நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் எனவும் போராட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் போதை யாழ்ப்பணத்தை மையப்படுத்திய சமூக உரிமை இயக்கம் மற்றும் தெற்கை மையப்படுத்திய சிங்கள சகோதரர்களும் கலந்து கொண்டனர்.




| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி