மே 18 இன அழிப்பு நினைவு நாளில் ஒன்றிணையுமாறு தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples
By Dilakshan May 18, 2024 12:24 AM GMT
Report

மே 18 இனஅழிப்பு நினைவுநாளில் அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு தமிழ்ச் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அழைப்பு விடுத்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டதன் மூலம் குறித்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த அறிக்கையில், “மே 18 இனவழிப்பு நினைவுநாளில் அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு அழைக்கிறோம்.

மிருசுவில் படுகொலை: கோட்டாபயவிற்கு நீதிமன்ற அழைப்பாணை

மிருசுவில் படுகொலை: கோட்டாபயவிற்கு நீதிமன்ற அழைப்பாணை


அதிகரிக்கும் நெருக்கடிகள்

எல்லா நினைவேந்தல்களும் தமிழ் மக்களை ஓருணர்ச்சிப் புள்ளியில் குவிக்கின்றன. அவை தாயகத்தில் மட்டுமல்ல உலகப் பரப்பெங்கும் தமிழ் மக்களை ஓருணர்ச்சிப் புள்ளியில் குவிக்கின்றன. வடக்குக் கிழக்காய் சட்டரீதியாகப் பிரிக்கப்பட்டிருக்கும் தமிழர் தாயகத்தை அவை உணர்வு பூர்வமாகப் பிணைக்கவல்லன.

மே 18 இன அழிப்பு நினைவு நாளில் ஒன்றிணையுமாறு தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு | Today Mullivaikkal Remembrance Day

அதனால்தான் கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவதற்கும் பரிமாறுவதற்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

குறிப்பாக கடந்த ஆண்டிலிருந்து கிழக்கில் நினைவேந்தலுக்கு எதிராக நெருக்கடிகள் அதிகரித்து வருவது தற்செயலானது அல்ல. வடக்கும் கிழக்கும் உணர்வுபூர்வமாக இணைவதை, தமிழர்களின் தாயகம் ஓருணர்ச்சிப் புள்ளியில் ஒன்றிணைவதைத் தடுக்க விரும்பும் சக்திகள் கிழக்கில் நினைவேந்தலைத் தடுக்கின்றன.

இந்த அடிப்படையில் திருகோணமலை சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய குற்றச்சாட்டில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகிய எமது உறவுகளோடு தமிழ் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு தன் தோழமையை உறுதிப்படுத்துகின்றது.

அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டிக்கின்றது. அதிபர் தற்போது முனைப்புக் காட்டும் உண்மை மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை ஏன் நம்ப முடியாது என்பதற்கு மேற்படி கைது நடவடிக்கைகள் போதிய சான்றுகள் ஆகும்.

விடுக்கப்பட்ட அழைப்பு

நினைவேந்தலை ஆகக் கூடிய மட்டும் பரவலாக்குவதும் தொடர்ச்சியானது ஆக்குவதும்தான் இத்தருணத்தில் தமிழ் மக்கள் செய்ய வேண்டியவை. கிழக்கில் ஒரு ஊரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தடுத்தால் ஏனைய எல்லா ஊர்களிலும் அதை பரவலாக்க வேண்டும்.

மே 18 இன அழிப்பு நினைவு நாளில் ஒன்றிணையுமாறு தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு | Today Mullivaikkal Remembrance Day

வரும் 18 ஆம் திகதி நமது சிவில் சமூக கூட்டிணைவில் வரும் அனைத்து சிவில் சமூகங்களும் தத்தமது எல்லைகளுக்கு உட்பட்டு தத்தமது பிரதேசங்களில் நினைவேந்தலை அனுஷ்டிக்குமாறும் நினைவேந்தும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு கொடுக்குமாறும் வேண்டுகிறோம்.

மே 18, தமிழ் மக்களை ஓர் உணர்ச்சிப் புள்ளியில் இணைக்கின்றது. அது தமிழ் மக்களின் தேசத் திரட்சியை உணர்வு பூர்வமாகப் பாதுகாக்கின்றது.

அவ்வாறு தமிழ் மக்களின் தேசத் திரட்சியை உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகம் உறுதிப்படுத்தும் விதத்தில் வரும் அதிபர் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நமது சிவில் சமூகங்களின் கூட்டிணைவு முன்வைக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் உணர்வு பூர்வமாகத் திரளும் தமிழர்கள் அல்லது முள்ளிவாய்க்காலை நோக்கி உணர்வுபூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள், அதேபோல வரும் அதிபர் தேர்தலிலும் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து தமிழ் மக்களின் தேசியத் திரட்ச்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அழைப்பு விடுக்கின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் அஞ்சலி

குமரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் அஞ்சலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...  


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025