நாடாளுமன்றத்தில் அமைதியின்மை! 2 எம்.பிக்கள் வெளியேற்றம் - நேரலை
மூன்றாம் இணைப்பு
நாடாளுமன்ற அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதுடன்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை சபையிலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்திருந்தாா்.
சபை தலைமை பீடத்திற்கு அருகில் வந்து பிரதி சபாநாயகருக்கு அச்சுறுத்தல் விடுத்தமையின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் இன்றைய அமர்விலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்திருந்தாா்.
அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் சபையிலிருந்து வெளியேறினர்.
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாக, சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சற்று முன் (23) சபையில் அறிவித்தார்.

முதலாம் இணைப்பு
இன்றைய நாடாளுமன்ற அமர்வு இன்று (23) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரம்
நேரலை