யாழ் மக்களுக்கான அவசர தகவல் - வழங்கப்பட்ட அழைப்பு இலக்கம்
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
Weather
By pavan
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்களுக்கு சீரற்ற காலநிலை தொடர்பில் அவசர வேண்டுகோள் ஒன்றை அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா வெளியிட்டுள்ளார்.
தொலைபேசி இலக்கம்
இதற்கமைய அவசர தேவைகளுக்கு 0773957894, 0212117117 அல்லது 117 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி