நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல்!
நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவும், மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய மத்திய, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில், மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகிறது.
அதிகபட்ச மழைவீழ்ச்சி
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில், மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 36.6 பாகை செல்ஸியஸ் அளவில் உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
14.6 பாகை செல்ஸியஸ் அளவில், குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அதேநேரம், 34 மில்லிமீற்றர் அளவில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா மாவட்டத்தின் லக்ஷபான பகுதியில் பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
