இன்றைய நாளுக்கான வானிலை அறிவித்தல்
Sri Lanka
Climate Change
Weather
By Sathangani
இன்று (20) மேல், சப்கரமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
40- 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று(20) சீரான வானிலை நிலவும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும், அவ்வப்போது மணிக்கு 40- 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி