சடுதியாக குறைந்துள்ள பணவீக்கம்..!
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Kiruththikan
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஜூன் மாதத்தில் பணவீக்கம் 12 சதவீதமாக குறைந்துள்ளது.
ஜூன் மாதத்தில் உணவு வகை பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக பதிவாகியிருந்து.
16.2 சதவீதமாகக் குறைந்துள்ள சதவீதம்
மே மாதத்தில் 21.5 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 4.1 சதவீதமாக கணிசமாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் 27 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் ஜூன் மாதத்தில் 16.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
