யாழில் அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி அதிக விலைக்கு விற்கப்பட்ட பொருட்கள்!
புதிய இணைப்பு
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் யாழ்ப்பாணம் நகர் பகுதிகள், கே.கே. எஸ். வீதி மற்றும் திருநெல்வேலி கடைகளில் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்றைய தினம் (01.12.2025) யாழ்ப்பாணம் நகர் பகுதிகள், கே.கே. எஸ். வீதி மற்றும் திருநெல்வேலி கடைகளில் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி செயற்கைத் தட்டுப்பாடு மற்றும் பொருட்களுக்கான விலைகளை அதிகரித்து விற்பனை செய்தல் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய தினம் திடீர் பரிசோதனையில் கீரிச்சம்பா அரிசி கடையில் விற்பனைக்காகவிருந்தும், அதனை விற்பனைக்கு மறுத்த கடை உரிமையாளர் மீது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி - தீபன்
முதலாம் இணைப்பு
பருத்தித்துறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலமையில் இடம்பெற்றது.
இன்றும் பருத்தித்துறை மரக்கறி சந்தை விவகாரம் பெரும் சூடுபிடித்தது.
காலை 10 மணியளவில் ஆரம்பமான அமர்வில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் மரக்கறி சந்தை விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

செய்தி - பிரதீபன்
முதலாம் இணைப்பு
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன.
குறித்த விடயத்தை தம்புள்ளை (Dambulla) பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளார்.
மழை மற்றும் மண்சரிவு
இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், போஞ்சு, லீக்ஸ் போன்ற மரக்கறிகளும் 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளன.
கடந்த வாரங்களில் 30 ரூபாவிற்கு விற்பனையான ஒரு கிலோ கிராம் பூசணிக்காயின் விலையும் 100 முதல் 130 வரை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
மழை மற்றும் மண்சரிவு காரணமாக பெரும்பாலான மரக்கறித் தோட்டப் பயிர்கள் அழிவடைந்தமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |