முற்றுமுழுதாக பாதிப்படைந்துள்ள மட்டக்களப்பின் விவசாய நிலங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட வேத்துச்சேனை, வட்டவளை, நாதனைவெளி, ஓட்டடிமுன்மாரி உள்ளிட்ட பல வயற்கண்டங்களில் பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்கள் இவ்வாறு வெள்ளத்தில் அள்ளுண்டு முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மண்ணுக்குள் புதையுண்ட நாற்றுக்கள்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வயல்வெளிகள் அனைத்தும் உடைப்பெடுத்து மீதமுள்ள நெல் நாற்றுக்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ள இந்நிலையில் விவசாயிகள் உடைப்பெடுத்துள்ள வரம்புகளை திருத்தி சீரமைத்து வருகின்றனர்.

வெள்ள நீர் வடிந்து கொண்டிக்கின்ற இந்நிலையில் வயல் பாதிப்புகள் தொடர்பில் தற்போதைய நிலையில் தொலைபேசி இணைப்புக்கள் சீராக கிடைக்கப்பெறாத போதும், விவசாய அமைப்புக்களுடாக பாதிப்பின் நிலவரங்கள் தொடர்பில் தரவுகளைச் சேகரிக்கும் செயற்பாடுகளை மோற்கொண்டுள்ளதாகவும், அப்பகுதி பெரும்பாக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வீதிகள்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான படுவாங்கரைப் பெருநிலப்பரப்பை ஊடறுத்துச் செல்லும் அம்பிளாந்துறை-வீரமுனை பிரதான வீதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இவ்வீதியின் புனரமைப்பு குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் நேரடி கள விஜயம் மேற்கொண்டு மதிப்பீடு செய்து வருகின்றனர். அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இவ்வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியிருந்ததனால் இவ்வீதியுடனான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரயாணிகள் இவ்வீதியை தற்காலிகமாக பயன்படுத்துவதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைப்பு பனிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவிக்கின்றர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |