வெள்ளத்தில் காணாமல் போன யாழ். இளைஞர் சடலமாக மீட்பு
கலா ஓயா வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தணிகாசலம் பத்மநிகேதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இளைஞர் சடலமாக மீட்பு
கடந்த 28 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து அநுராதபுரம் புத்தளம் வீதியில் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது.

முதல் கட்டமாக பேருந்தில் சிக்கியவர்களை அருகில் இருந்த வீடொன்றின் கூரை மீது ஏற்றி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, பின்னர் கடற்படையினரின் உதவியுடன் படகுகளில் ஏற்றப்பட்டு இரு நாட்கள் கடுமையான போராட்டத்தின் மத்தியில் அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
இந்தநிலையில் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கடந்த சில நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த இளைஞன் காணாமல் போன நிலையில் அவருடைய தேசிய அட்டையை நொச்சியாகம பிரதேச செயலாளர் தனக்க அனுப்பி உள்ளதாகவும் நீர் மட்டம் இன்னும் குறையாத படியால் மேலதிக விபரங்கள் தெரியவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தனது சமூகவலைதள பதிவில் நேற்று தெரிவித்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |