அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் : ஈரான் பகிரங்கம்
"நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்," என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை செயலாளர் அலி லாரிஜானி (Ali Larijani) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஈரான் முயற்சிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என அலி லாரிஜானி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கையை மேற்கோள் காட்டிச் செய்தி வெளியிட்டுள்ள சர்வதேச ஊடகங்கள், ஈரான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.
அலி லாரிஜானி குற்றச்சாட்டு
ஈரான் தன்னிடம் "பேச்சுவார்த்தை" நடத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் கருத்துகளுக்கு முரணாக இவரது கருத்து அமைந்துள்ளது.

இதேவேளை புதிய பொய்களால் அமெரிக்க வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் ட்ரம்ப் விலை கொடுக்க வைக்கிறார் என்று அலி லாரிஜானி குற்றஞ்சாட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |