மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் : உச்சம் தொட்ட தங்க விலை
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று (02) பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,363 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
வெள்ளியின் விலையும் உயர்வு
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்வைக் கண்டுள்ள நிலையில் ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 94.89 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் காரணமாக, இன்று உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை குறிப்பாக, ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |