உயிர்ச் சேதங்களை மறைக்கின்றதா அநுர அரசு.... சபையில் சாணக்கியன் கடும் வாக்குவாதம்

Anura Kumara Dissanayaka Shanakiyan Rasamanickam Floods In Sri Lanka NPP Government
By Sathangani Dec 01, 2025 06:01 AM GMT
Report

நாட்டில் நீலவிய சீரற்ற காலநிலையினால் இதுவரை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்தார்.

அனைத்து எதிர்கட்சியினரும் எடுத்துள்ள தீர்மானத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியினரும் சபையில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்றைய (01.12.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

டித்வா புயலால் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய எதிர்க்கட்சி!

டித்வா புயலால் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய எதிர்க்கட்சி!

சபாநாயகர் மறுப்பு 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல நாடு பூராகவும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை விபரம் நேற்று மாலை 6 மணிக்கு பிறகு தரப்படவில்லை. அரசாங்கம் தகவல்களை வெளியிட தயக்கம் காட்டுகின்றது.

உயிர்ச் சேதங்களை மறைக்கின்றதா அநுர அரசு.... சபையில் சாணக்கியன் கடும் வாக்குவாதம் | Anura Govt Hiding Deaths Itak Out From Parliament

இவ்வாறானதொரு நிலையில் எதிர்கட்சியை சேர்ந்த நாம் அனைவரும் ஓரணியாக நின்று இன்றைய நாளில் நாடாளுமன்றத்தில் இருந்து எங்களுடைய மாவட்டங்களிலுள்ள மக்களின் குறைபாடுகளை மற்றும் நிவாரணப்பணிகளை எவ்வாறு செய்யலாம் என்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

காரணம் நாங்கள் மாத்திரமல்ல பெரும் சிரமத்துக்கு மத்தியில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வந்துள்ளோம். மக்கள் நலன் தொடர்பில் பல விடயங்களை சிந்தித்து செயற்படுத்த வேண்டியுள்ளது, அதற்காக சில மணிநேரம் கேட்டும் சபாநாயகராகிய நீங்கள் அதற்கான வாய்ப்பை தரவில்லை.


மீட்பின் போது உயிரிழந்த விமானி : மனதை உருக்கும் பதிவு

மீட்பின் போது உயிரிழந்த விமானி : மனதை உருக்கும் பதிவு

 படுகொலையாக கருதப்படுகின்றது

இந்த அனர்த்தம் முன்னாயத்தம் இல்லாத படுகொலையாகவே கருதப்படுகின்றது. ஆகவே, மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க முடியாத இந்த உயரிய சபையில் இருந்து வெளியேறுகின்றோம்“ என தெரிவித்துள்ளார்.


இதேவேளை இன்று காலை 10 மணியளவில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 355 பேர் உயிரிழந்ததுடன் 366 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பிறகு உயிரிழந்தவர்களின் விபரம் அரசினால் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் சபை அமர்வில் இருந்து வெளியேறுவதாக செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை விட்டு விலகிச் செல்லும் தாழமுக்கம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை நீக்கம்

இலங்கையை விட்டு விலகிச் செல்லும் தாழமுக்கம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை நீக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026