டித்வா புயலால் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய எதிர்க்கட்சி!
டித்வா புயல் நிவாரணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.
இதன் காரணமாக எதிர்கட்சிகள் தற்போது நாடாளுமன்றில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசிம் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் தொடர்பில் இன்றைய தினம் (01.12.2025) நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
சபை முதல்வர்
எனினும், அரசாங்கத்தின் சார்பில் இதற்கு பதிலளித்த சபை முதல்வர் இன்றைய தினம் (01.12.2025) திட்டமிட்ட வரவு செலவு திட்ட விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் மதியம் 12.30 வரை சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் எதிர்க்கட்சிகளின் திட்டங்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க முடியும் என பதிலளித்திருந்தார்.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தியினர் இந்த விடயத்துக்கு உடன்படாது, சபையிலிருந்து வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து, தமிழரசுக்கட்சி, ரெலொ தரப்பு ஆகிய கட்சிகள் சபை விவாதத்தில் இருந்து வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |