ஒபரேஷன் ரோரிங் லையன் தாக்குதலில் பலியான இலங்கையின் நெருங்கிய ஈரானிய இராஜதந்திரி
ஈரானிய முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்தி குறித்து இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவரை இலங்கையின் நெருங்கிய நண்பர் என்றும் வர்ணித்துள்ளார்.
அஹ்மதி நெஜாத்தின் படுகொலையைக் கேட்டு "அதிர்ச்சியடைந்தேன்" என்று ஒரு அறிக்கையில் நாமல் கூறியுள்ளார்.
இருதரப்பு உறவு
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் முன்னாள் ஈரானியத் தலைவரின் பங்கை நினைவு கூறியுள்ளார்.

“2008 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்குவதில் அஹ்மதிநெஜாட் முக்கிய பங்கு வகித்தார்.
ஈரான் எப்போதும் இலங்கையின் உண்மையான நண்பராக இருந்து வருகிறது.
வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அனைவரின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த அவசியமான நேரத்தில் ஈரான் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம், மேலும் அனைத்து தரப்பினரும் போரின் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக நிதானத்தைக் கடைப்பிடித்து விவாதங்களைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |