மாத ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர்

Today Rasi Palan Horoscope Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Thulsi May 31, 2026 03:44 AM GMT
Report

வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.

இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.

விஜய்க்கு பிரதமர் மோடியின் பயன்தரு ‘அட்வைஸ்’

விஜய்க்கு பிரதமர் மோடியின் பயன்தரு ‘அட்வைஸ்’

மேஷ ராசி

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்களால் மகிழ்ச்சியும் ஆதாயமும் ஏற்படுவதுடன், செலவுகளும் ஏற்படும். பணவரவுக்குக் குறைவி ருக்காது.

கணவன் - மனைவிக்கிடையே இருந்த பிரச்னை மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆடம்பர வசதிகள் பெருகும். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவும், அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

மாத ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் | Top 5 Zodiac Signs Monthly Rasipalan In Tamil

சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். புதிய ஆடை வாங்க நினைத்திருந்த எண்ணம் இப்போது நிறைவேறும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணிகளை மேற்கொள்ளவேண்டி வரும்.

அதன் காரணமாக செலவுகளும் அதிகரிக்கும். வேலையின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவதற்கான வாய்ப்பு ஏற்படும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும்.

அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தைவழி உறவினர்கள் முரண்டு பிடித்தாலும் அனுசரித்துச் செல்வது நல்லது.

அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இழுபறியான நிலையே காணப்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் மிகுந்த கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றமும் ஏற்படக்கூடும். அதிகாரிகளின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது.

மாதப் பிற்பகுதியில் அரசுப் பணியில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தொழில்,வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சக போட்டியாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.

பற்று வரவில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். புதிய ஆடை, ஆபர ணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவிஉயர்வு, ஊதியஉயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கக்கூடும்.

மிதுனம் ராசி 

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் சிறிய அளவில் வளைகாப்பு, பெயர்சூட்டல் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். இழுபறியாகி வந்த அரசாங்கக் காரியங்கள் மிகுந்த பிரயாசையின்பேரில் சாதகமாக முடியும் .

உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். தடைப்பட்ட புதிய முயற்சி கள் இனி சாதகமாக முடியும். வீட்டில் பொன்,பொருள் சேரும் வாய்ப்பும் ஏற்படும்.

மாத ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் | Top 5 Zodiac Signs Monthly Rasipalan In Tamil

பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக் கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

அக்கம்பக்கத் தில் இருப்பவர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப் பிடிக்கவும். இளைய சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். முக்கிய முடிவுகளில் குடும்பப் பெரிய வர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்வது நல்லது.

அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு அமோகமாக இருக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். நிர்வாகத்தினரிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு தொழில் அபிவிருத்தி அடையும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை எதுவும் இருக்காது. தேவையான பணம் கிடைக்கும். உறவினர்களிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

கடகம் ராசி

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களிடையே ஏற்பட்டிருந்த அவப் பெயர் நீங்கும். செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் உற்சாகம் ஏற்படும். பகைவர்களால் இருந்து வந்த இடையூறுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மாத ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் | Top 5 Zodiac Signs Monthly Rasipalan In Tamil

திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பழுதான பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கூடுமானவரை தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். உங்க ளைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து, வலிய வந்து மன்னிப்புக் கேட்பார்கள்.

நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். தந்தைவழியில் உங்க ளுக்குச் சேரவேண்டிய சொத்துகள் கிடைப்பதற்கான வாய்ப்பு கனிந்து வரும். சொந்த ஊரிலுள்ள குலதெய்வக் கோயில் திருப்பணிகளுக்கு உதவி செய்வீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சியுடன் செலவுகளும் அதிகரிக்கும்.

தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். அவரிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணிச்சுமை குறைவதால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

நிர்வாகத்திடம் முக்கிய கோரிக்கை வைப்பதற்கு சாதகமான மாதம். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அரசின் சலுகை, வங்கிக் கடனுதவி போன்றவை கிடைக்கும்.

பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அவர்களின் சாமர்த்தியத்தால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பைப் பெறுவர். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களுடன் உறவு சுமுகமாகும். புத்தாடை, நகை வாங்கலாம். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

சிம்மம் ராசி

தடைகளை முறியடித்து சாதனை படைப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அவசியத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் மறையும்.

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து திரும்பி வந்து அன்பு பாராட்டுவார்கள்.

மாத ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் | Top 5 Zodiac Signs Monthly Rasipalan In Tamil

கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு கனிந்து வரும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் மனக்கசப்பு தரும் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என்பதால், கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் சில அனுகூலப் பலன்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.

பணியாளர்களுக்கு இதுவரை இருந்த அவப்பெயர் மறையும். சக ஊழியர்களிடையே உங்கள் செல் வாக்கு உயரும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தொழில், வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபம் அதிகரிக்கும். ஷேர் வர்த்தகத்தில் மட்டும் சற்று எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களால் புதிய ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். புதிய பொறுப்பு ஒன்று தேடி வரும்.  

1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

விருச்சிகம் ராசி

எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பொருளாதார வளம் கூடும். கணவன் - மனைவிக்கிடையே மாத முற்பகுதியில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பிற்பகுதியில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

மாத ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் | Top 5 Zodiac Signs Monthly Rasipalan In Tamil

சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி, நல்ல வரன் அமையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும்.

புதிய வாகனம் வாங்கலாம். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சொத்துச் சேர்க்கைக்கும், பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

அரசாங்கக் காரியங்கள் அனுகூல மாக முடியும். தந்தையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சிறப்பான வளர்ச்சி காணலாம். சம்பள உயர்வுக்குத் தடையில்லை. வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவர். பதவி உயர்வு உண்டு.

எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரித்தாலும், நல்ல வளர்ச்சியும், பணவரவும் இருக்கும். பங்குதாரர்கள் தக்க சமயத்தில் உதவுவர்.

சிலநேரங்களில் முயற்சிகளில் தடைகள் வரலாம். பெண்களுக்கு பிரச்னை எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். தேவையான அளவுக்குப் பணம் இருப்பதால் குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண் களுக்கு அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.  

மக்களை ஏமாற்றும் NPP - ரில்வின் சில்வாவால் வெடிக்கும் சர்ச்சை - சாடும் தமிழ் எம்.பி

மக்களை ஏமாற்றும் NPP - ரில்வின் சில்வாவால் வெடிக்கும் சர்ச்சை - சாடும் தமிழ் எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016