ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி படைத்த புதிய சாதனை - குவியும் பாராட்டுக்கள்
ஐபிஎல் போட்டியில் அதிகமுறை 200 ஓட்டங்களை குவித்து சாதனைப் படைத்த சிஎஸ்கே அணிக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
முதலில் 'டாஸ்' ஜெயித்த பெங்களூரு கேப்டன் டூ பிளிஸ்சிஸ் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனையடுத்து, சென்னை சூப்பர் கிட்ஸ் அணி துப்பாட்டம் செய்ய களத்தில் இறங்கியது.
புதிய சாதனை
இப்போட்டியில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 226 ஓட்டங்கள் எடுத்தது.
இதன்படி, ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
அத்துடன் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகவும் பதிவானது. இதனையடுத்து, 227 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களத்தில் இறங்கியது.
இப்போட்டியின் முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்களே எடுத்தது. இதனால், சென்னை அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது இடம்
இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (25 முறை) 200 ஓட்டங்களுக்கு மேல் ஓட்டங்களை குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.
2-வது இடத்தில் பெங்களூரு அணியும், (24 முறை), 3-வது இடத்தில் பஞ்சாப் அணியும் (17 முறை) இடம் பிடித்துள்ளது.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 9 மணி நேரம் முன்
