29 தேசிய பட்டியல் ஆசனங்களுக்கு 527 பேர் வரிசையில்..!
29 தேசிய பட்டியல் ஆசனங்களுக்கு சுமார் 527 பெயர்கள் தேர்தல் வேட்புமனுவுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 99 ஏ பிரிவின் கீழ் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தகுதி வாய்ந்த 527 பேரின் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட 27 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் இணைந்து 527 தேசிய பட்டியல் பெயர்களை தேர்தல் வேட்புமனுவுடன் சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசியப் பட்டியல்
அதன்படி, இவ்வருட பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 527 பேரில் 29 பேர் அரசியலமைப்பு 99 ஏ பிரகாரம் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.
இதேவேளை, நாடாளுமன்ற தேர்தல் திகதி நெருங்கி உள்ள நிலையில், சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |