வெளிநாடொன்றில் எரிமலை வெடிப்பு: பல சர்வதேச விமான சேவைகள் ரத்து
இந்தோனேசியாவின் (Indonesia) பாலி (Bali) தீவுக்கான பல முக்கிய நாடுகளின் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீவுப் பகுதியில், உள்ள எரிமலையில் இருந்து சாம்பல் துகள்கள் மற்றும் பாரியளவான புகை வெளியேறுவதன் காரணமாகவே இவ்வாறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாடுகள்
இதன்படி, அவுஸ்திரேலியா, ஹொங்கோங், இந்தியா, மலேசியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் தங்களது விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
இந்த நிலையில், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குப் பாலிக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமான சேவைகள்
குறிப்பாக நேற்றைய தினம் (12) 22 சர்வதேச விமான சேவைகளும் 12 உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பாலி தீவானது, இந்தோனேசியாவின் சிறந்த சுற்றுலாப் பகுதி என்பதோடு அவுஸ்திரேலிய பார்வையாளர்களை அதிகம் ஈர்க்கும் ஒரு இடமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |