யாழில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகத்தர் திடீரென உயிரிழப்பு
யாழ்ப்பாண (Jaffna) தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று (14) நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் கடமையில் ஈடுபட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்களிப்பு நிலையத்தில்
யாழ்ப்பாணம் - உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்தவரே இன்று உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் காவல் நிலையத்தில் கடமை புரியும், வட்டுக்கோட்டையை சேர்ந்த 32 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தரே சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனால் வாக்குச் சாவடியில் சிறிது பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் வேறொரு காவல்துறை உத்தியோகத்தரை நியமித்து வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்று வருகிறது
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |