யாழில் உலங்கு வானூர்தி மூலம் எடுத்து வரப்பட்ட வாக்குப் பெட்டிகள்
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 4 மணியளவில் நிறைவடைந்ததை அடுத்து வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில், நெடுந்தீவு தவிர ஏனைய தீவக பகுதிகளில் இருந்து வாக்கு பெட்டிகள் விசேட படகுகளில் குறிகாட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்டு பேருந்துக்களில் வாக்கெண்ணும் நிலையமான யாழ். மத்திய கல்லூரிக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
விசேட உலங்கு வானுர்தி
அதேவேளை நெடுந்தீவில் (Neduntheevu) இருந்து வாக்குப் பெட்டி விமானப் படையினரின் விசேட உலங்கு வானுர்தியில் யாழ். மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
நெடுந்தீவிலிருந்து உலங்குவானூர்தி மூலம் வருகை தந்த சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களையும், விமானிகளையும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் மற்றும் உதவித்தேர்தல்கள் ஆணையாளர் இ.கி. அமல்ராஜ் , மற்றும் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் ஏ.ஜெ. ஹாலிங்க ஜெயசிங்க ஆகியோா் வரவேற்றார்கள்.
இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |