யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ள மொத்த வாக்களிப்பு வீதம்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு உட்பட 59.65℅ வீதம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
நான்காம் இணைப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் பி.ப 03.00 மணி நிலவரப்படி 47% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
முன்றாம் இணைப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையான நிலவரத்தின் படி 42% வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் பிற்பகல் 01.00 மணி நிலவரப்படி 36% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான (Sri Lanka parliamentary election) வாக்களிப்பு நடவடிக்கைகள் யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் மாவட்டச் செயலகம் இன்று (14) விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப் பதிவு
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் முற்பகல் 10.00 மணி வரையான நிலவரப்படி 16% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இம்முறை யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வாக்காளர்கள் தீவக பகுதிகளுக்கு வாக்களிக்க செல்வதற்கு குறிகட்டுவான் பகுதியில் இருந்து விசேட படகு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான வாக்கெண்ணும் நடவடிக்கைகள் யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |