இலங்கையிலிருந்து விரைவில் வெளியேறுங்கள் - வெளிநாடுகள் விடுத்துள்ள அறிவுறுத்தல்
Sri Lanka
SL Protest
Tourism
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
இலங்கைக்கு செல்ல வேண்டாம்
பிரித்தானியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் பிரஜைகள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அந்த நாடுகள் அறிவித்துள்ளன.
நாட்டின் பயண ஆலோசனைகளை புதுப்பித்து, இலங்கையில் வன்முறை போராட்டங்கள் காரணமாக பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
எனவே, இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் தமது பிரஜைகள் இருமுறை சிந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.
விரைவில் வெளியேறுங்கள்
இதேவேளை, வேறு பல வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், இலங்கையில் இருந்தால் அங்கிருந்து விரைவில் வெளியேறுமாறு தாய் நாடுகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
