மிகிந்தலை விகாரைக்கு ஒளியூட்டிய உல்லாச பயணிகள்
Anuradhapura
Sri Lanka Tourism
By Sumithiran
அநுராதபுரம் மிகிந்தலை ரஜமஹா விகாரைக்கு தீப்பந்த வெளிச்சத்துடன் உல்லாசப் பயணிகள் வழிபடச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மிகிந்தலை ரஜமஹா விகாரை நிர்வாகம் மின் நிலுவை கட்டணத்தை செலுத்த தவறியதாக தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை மின்சாரசபை மின்விநியோகத்தை துண்டித்திருந்தது.
இருளில் மூழ்கிய விகாரை
இந்நிலையில் மிகிந்தலை ரஜமஹா விகாரை வளாகம் இருளில் மூழ்கியுள்ளது.
தீப்பந்த வெளிச்சத்தில்
இவ்வாறு மின் துண்டிக்கப்பட்டதை அறியாத பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் உட்பட வெளிநாட்டு உல்லாச பயணிகள் தீப்பந்த வெளிச்சத்தில் மிஹிந்தலை மலையில் ஏறிச்செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதேவேளை செலுத்தப்படாத மின்நிலுவை கட்டணத்தை தாம் செலுத்தவுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச நேற்றையதினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
images -daily mirror
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி