கண்டியில் தடம் புரண்டது மெனிகே தொடருந்து - மலையக மார்க்க போக்குவரத்து பாதிப்பு
Kandy
Department of Railways
By pavan
செங்கடகல மெனிகே தொடருந்து தடம் புரண்டதால் மலைநாட்டுக்கான தொடருந்துப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த செங்கடகல மெனிகே தொடருந்து கடிகமுவ மற்றும் ரம்புக்கன தொடருந்து நிலையத்திற்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
தடைப்பட்ட தொடருந்து சேவை
மேலும் குறித்த விபத்தால் மலையகப் பாதையில் செல்லும் தொடருந்து சேவை தடைப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்