வலுக்கும் நெருக்கடி!! தொடருந்து கட்டணத்தை உயர்த்த கோரிக்கை
தொடருந்து கட்டணத்தை சுமார் 50 சதவீதமாக அதிகரிக்குமாறு அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு தொடருந்து ஓன்று 100,000 லீற்றருக்கு மேல் எரிபொருளைப் பயன்படுத்துவதால் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அதன் பேச்சாளர் பிரதிப் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
புகையிரத திணைக்களத்திடம் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி
இன்று அதிகாலை 2 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலியாக இன்று முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் மற்றும் தனியார் பேருந்து கட்டணம் ஆகியவற்றை உயர்த்தவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
