தொடருந்து பயணிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சி தகவல்! நடைமுறைப்படுத்தவுள்ள புதிய திட்டம்
Sri Lanka
Sri Lanka Railways
Department of Railways
Railways
By pavan
தொடருந்து பயணிகளுக்காக தொடருந்து திணைக்களம் புதிய நடைமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி முதல் தொடருந்து ஆசனங்களை, முன்கூட்டியே ஒதுக்கிக் கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்படவுள்ளது.
தற்போது தொடருந்து ஆசனங்களை ஒதுக்கிக் கொள்வதற்கான அதியுச்ச காலம் 14 நாட்களாக உள்ளன.
13 ஆம் திகதி முதல்
எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் அந்த கால எல்லை, 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்களின் கோரிக்கைக்கு அமையவும், உயர்தர சேவையை வழங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

