இன்னும் சில நாட்களில் யாழ் - கொழும்பு தொடருந்து சேவை.! வெளியான நேர அட்டவணை
யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் - கொழும்பிற்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வழமை போன்று முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்திய நிதி உதவியின் கீழ் மஹவ முதல் ஒமந்தை வரை முன்னெடுக்கப்பட்ட தொடருந்து மார்க்க புனரமைப்பு பணிகள் காரணமாக கடந்த ஆறு மாத காலமாக அனுராதபுரம் வரை சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
புனரமைப்பு பணிகள் நிறைவு
இந்த நிலையில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அனுராதபுரத்தில் இருந்து வவுனியாவின் ஒமந்தையிலுள்ள தொடருந்து நிலையம் வரை யாழ் தேவி தொடருந்து பரீட்சாத்த பயணத்தை நேற்று(9) மேற்கொண்டிருந்தது.
இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளின் கீழ் .அனுராதபுரத்தில் இருந்து வவுனியா வரை 48 கிலோமீற்றர் தூரமும் , வவுனியாவில் இருந்து ஓமந்தை வரை 13 கிலோமீற்றர் தூரமும் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







