எம்.பி ஒருவர் கொலை செய்யப்பட்டால் சபாநாயகரே பொறுப்பு! அரசுக்கு உச்சக்கட்ட அழுத்தம்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாவலராக சபாநாயகரே அதனை பொறுப்பேற்க வேண்டும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசேகர, பாதாள உலகக் குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவவின் கொலை மேற்கோற்காட்டி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற வேளை, காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரிகள் ஏன் எதுவும் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளிருந்து வரும் உதவி குறித்து சந்தேகங்களை எழுந்துள்ளதாகவும், இது குறித்து விசாரிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு
அத்தோடு, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இலங்கையின் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் சமீபத்தில் பாதாள உலக நடவடிக்கைகள் குறித்த பிரச்சினையை தீர்ப்பதாக கூறிய நிலையில், கடந்த 4 போயா நாட்களுக்குள் மொத்தம் 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், இரண்டு அப்பாவி குழந்தைகள் உட்பட 12 இறப்புகளும் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், தேசிய பாதுகாப்பு தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அரசாங்கம் இன்னும் கூறி வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் கவனம்
அத்துடன், நீதிபதிகளுக்கான பாதுகாப்பை நீக்குவதாக அறிவிக்கும் சுற்றறிக்கையை எடுத்துக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நீதிபதிகள் எவ்வாறு தீர்ப்புகளை வழங்குவார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களையும் சுட்டிக்காட்டிய தயாசிறி ஜெயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் சபாநாயகரே பொறுப்பு என கூறியுள்ளார்.
மேலும், தாங்கள் பாதுகாப்பை கோரவில்லை, ஆனால் மற்றவர்களால் சுட்டுக் கொல்லப்பட தாங்கள் தயாராக இல்லை எனவும் இந்த சூழ்நிலையை அரசாங்கம் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 19 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்