மீண்டும் நாடாளுமன்றுக்குள் ரணில்..! வெளியாகும் தகவல்கள்
புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கவுக்கு அதற்கான வாய்ப்பை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரணில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைத் தொடர்பு கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவே அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
மக்களின் வேண்டுகோள்
இவ்வாறானதொரு பின்னணியில், பல்வேறு கட்சிகள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்திற்கு வருமாறு முன்மொழிந்துள்ளன.
இதேவேளை, அண்மையில் ரணில் விக்கிரமசிங்க காலி பகுதிக்கு விஜயம் செய்தபோது, மக்கள் அவரை நாடாளுமன்றத்திற்கு வந்து பொது சேவையில் சேருமாறு கேட்டுக்கொண்டதையடுத்து, அவர்களை ரணில் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
