இன்று முதல் வருகிறது பணம்: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல்
70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள சிரேஷ்ட பிரஜைகளுக்கு மாதாந்த கொடுப்பனவு ரூ.3,000 வழங்குவது தொடர்பான அறிவிப்பை முதியோர்களுக்கான தேசிய சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தொடர்புடைய கொடுப்பனவுகள் இன்று முதல் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
பெப்ரவரி மாத கொடுப்பனவு
இந்த நிலையில், பெப்ரவரி மாதத்திற்கான கொடுப்பனவு மற்றும் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை அஞ்சல் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, அஸ்வெசும குடும்பங்களில் உள்ள சிரேஷ்ட பிரஜைகளை தவிர்த்து, இதுவரை கொடுப்பனவை பெற்று வரும் நபர்களுக்கு மாத்திரமே இந்தக் கட்டணம் வழங்கப்படும் என்றும் செயலம் அறிவித்துள்ளது.
நடைமுறை சிக்கல்கள்
கடந்த காலங்களில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக குறிப்பிட்ட திகதியில் கொடுப்பனவை செலுத்த முடியாமல் முதியவர்கள் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், கொடுப்பனவுகளை பெப்ரவரி 20 ஆம் திகதிக்கு முதல் தபால் மற்றும் துணை தபால் அலுவலகங்கள் மூலம் செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
