தனியார் பேருந்துகள் இயங்குவது 50 வீதமாகக் குறையும் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis Fuel Price In World National Fuel Pass
By Sathangani Mar 16, 2026 11:18 AM GMT
Report

இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் போது தினசரி இயங்கும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறையும் என அந்த பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுமார் 13,000 தனியார் பேருந்துகள் உள்ளதாகவும் இந்த நடைமுறையினால் 6,500 பேருந்துகளை மாத்திரமே இயக்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போதுள்ள பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டிப்போக்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனவும், இதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மக்களுக்கு எச்சரிக்கை: எரிபொருள் QR குறியீட்டைப் பெற போலி வலைத்தளம்

மக்களுக்கு எச்சரிக்கை: எரிபொருள் QR குறியீட்டைப் பெற போலி வலைத்தளம்

பேருந்துகளுக்கு எரிபொருள் 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இது ஒரு பாரதூரமான பிரச்சினையாக மாறும். எங்களிடம் உள்ள பேருந்துகளுக்கு எரிபொருள் பெறுவதற்கு தற்போதுள்ள டிப்போக்களின் எண்ணிக்கை போதாது.

தனியார் பேருந்துகள் இயங்குவது 50 வீதமாகக் குறையும் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Private Bus Operations To Be Reduced By 50 Pr

இதனால் நீண்ட வரிசைகள் ஏற்படும். அதேபோல், அவர்கள் இரவு நேரங்களில் டீசல் வழங்குவதில்லை. நாங்கள் சேவையில் ஈடுபட்டுவிட்டுத்தான் எரிபொருள் பெற வருகிறோம்.

ஆனால் டிப்போக்கள் மாலை 5 மணிக்கே மூடப்படுகின்றன. அவ்வாறு நடந்தால் அடுத்த நாள் எம்மால் சேவையில் ஈடுபட முடியாது, வீதியிலேயே கிடக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எரிபொருள் விநியோகம் : விவசாயிகளுக்கு விசேட சலுகை

எரிபொருள் விநியோகம் : விவசாயிகளுக்கு விசேட சலுகை

பொதுப் போக்குவரத்துச் சேவை

இதன் விளைவாக இலங்கை முழுவதும் 50 சதவீத பேருந்துகளை மாத்திரமே இயக்க முடியும். QR நடைமுறைக்கு முன்னதாகவே இதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ளுமாறு நான் இரண்டு வாரங்களுக்கு முன்பே கூறினேன்.

தனியார் பேருந்துகள் இயங்குவது 50 வீதமாகக் குறையும் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Private Bus Operations To Be Reduced By 50 Pr

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நாம் அறிவோம். ஆனால் ஏழை மக்கள் தனியார் மற்றும் அரச பேருந்துகளிலேயே பயணிக்க வேண்டியுள்ளது.

எனவே, பொதுப் போக்குவரத்துச் சேவைக்கு முன்னுரிமை வழங்குங்கள், இல்லையெனில் அரசாங்கம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும். இலங்கையில் உள்ள 13,000 பேருந்துகளில் 6,500 மாத்திரமே ஓடும் நிலை ஏற்படும்." என தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாடால் இலங்கையில் ஸ்கூட்டருக்கு லிஃப்ட் கொடுத்த ஸ்கூட்டர்!

எரிபொருள் தட்டுப்பாடால் இலங்கையில் ஸ்கூட்டருக்கு லிஃப்ட் கொடுத்த ஸ்கூட்டர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026