யாழ். நீதிபதியின் திடீர் இடமாற்றம் - ஊழல்வாதிகளுக்கு துணைபோகும் ஆளுநர்: சாடும் ஆசிரியர் சங்கம்

Jaffna Ceylon Teachers Service Union Nothern Province Court of Appeal of Sri Lanka NPP Government
By Thulsi Jun 02, 2026 03:35 AM GMT
Report

யாழ்ப்பாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் வடக்கில் நீதித்துறையை எங்களால் அடக்க முடியும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அலெக்ஸ் ராஜா திடீரென பதுளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

யாழில் வீடொன்றில் கோடி ருபாய் கொள்ளை - 16 வயது சிறுவன் கைது

யாழில் வீடொன்றில் கோடி ருபாய் கொள்ளை - 16 வயது சிறுவன் கைது

திடீர் இடமாற்றம்  

இந்தப் பின்னணியில் அவர் கையாண்ட வழக்குகளே காரணம் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டியுள்ள நிலையில் வடமாகாண ஆளுநரும் ஒரு அமைச்சர் ஒருவரும் இதன் பின்னணியில் இருப்பதாக நம்பத் தகுந்த முறையில் அறிவதாகவும் குற்றச்சாட்டியுள்ளனர்.

யாழ். நீதிபதியின் திடீர் இடமாற்றம் - ஊழல்வாதிகளுக்கு துணைபோகும் ஆளுநர்: சாடும் ஆசிரியர் சங்கம் | Transfer Of High Court Judge Ag Alexraja Issue

இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆட்சியாளர்கள் தாங்கள் நினைத்தால் நீதித்துறையை அடக்குவோம் என்பதற்கு சிறந்த ஒரு உதாரணமாக அமைகிறது.

மாற்றம் என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த அரசாங்கங்களை விட மோசமாக நீதித்துறையின் மேல் அடக்குமுறைகளை மேற்கொள்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

முன்னாள் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா பருத்தித்துறை நகர சபை விவகாரம் மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்களை நீதியின் பக்கமாக அணுகியதால் அவர் மீது அரசாங்க தரப்புக்கு அதிர்ச்சி நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதன் பின்னணியில் வட மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் ஒருவரின் அழுத்தத்தின் பெயரில் நீதிபதியின் திடீர் இடமாற்றம் இடம் பெற்றிருப்பதற்கான வலுவான சந்தேகங்கள் எழுகின்றது.

மகளிடம் தகாத வார்த்தை பிரயோகம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட தந்தை

மகளிடம் தகாத வார்த்தை பிரயோகம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட தந்தை

நிர்வாக திறமையற்ற ஊழல்வாதி

வட மாகாண ஆளுநரை பொறுத்தவரையில் நிர்வாக திறமையற்ற ஊழல்வாதிகளுக்கு துணைபோகும் நபராக காணப்படுகின்ற நிலையில் அவரது செயற்பாட்டால் வடக்கு மாகாண நிர்வாகம் குழம்பிய நிலையில் காணப்படுகிறது.

யாழ். நீதிபதியின் திடீர் இடமாற்றம் - ஊழல்வாதிகளுக்கு துணைபோகும் ஆளுநர்: சாடும் ஆசிரியர் சங்கம் | Transfer Of High Court Judge Ag Alexraja Issue

தனது நிர்வாக திறமை இன்மையை மறைக்கும் முகமாக கல்வி அதிகாரிகள் மீது குறைகளை அள்ளி வீசும் நபராக காணப்படுகிறார். வடக்கில் இருந்த ஆளுநர்கள் போராட்டங்கள் இடம்பெறும் போது போராட்டக்காரர்களை அழைத்து பிரச்சினைகளை கேட்டு அறிவது தான் வழக்கம்.

ஆனால் இவர் மட்டும் போராட்டக்காரர்களுடன் பேசுவதற்கு தயார் இல்லை இதை நிர்வாக திறமை இன்மையே இதற்குப் பிரதான காரணம்.

அரசாங்கத்தின் தவறுகளை நீதித்துறை சுட்டிக்காட்ட முற்படும்போது அதற்கு எதிராக நீதித்துறையை அடக்க முனைவது ஜனநாயகத்தை குழி தண்டி புதைக்கும் செயலாகும்.

ஆகவே சட்டத்தின் பாதுகாவலராக செயற்படும் நீதிபதிகள் இவர்களின் செயற்பாடுகளை ஏண்ணி மனம் தளராது நீதியை தொடர்ந்து நிலை நாட்டுவார்கள் என நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.  

செம்மணி புதைகுழிக்குள் இருந்து தாயத்துடன் என்பு கூடு மீட்பு!

செம்மணி புதைகுழிக்குள் இருந்து தாயத்துடன் என்பு கூடு மீட்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015