ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர் இடமாற்ற முறையை ஏற்படுத்துவது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இரத்தினபுரி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளிட்டுள்ளார்.
ஆசிரியர் பற்றாக்குறை
நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கட்டமைக்கப்பட்ட மற்றும் பயனுள்ள ஆசிரியர் இடமாற்றக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கல்விச் செயல்பாட்டில் ஆசிரியர்கள் ஒரு தீர்க்கமான காரணியாக உள்ளனர் என்றும், அதன் வெற்றியை உறுதி செய்வதற்கு பொருத்தமான ஆசிரியர் பகிர்வை பராமரிப்பது மிக முக்கியம் எனவும் பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
