யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் போக்குவரத்து! அமைச்சரவை இணக்கம்
SriLankan Airlines
Jaffna
India
By Kiruththikan
அமைச்சரவையில் முடிவு
யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான சாதகமான முடிவுகள் நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனூடாக மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும் உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையும் தேவையானளவு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
