வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம் : இடியுடன் கொட்டப் போகும் மழை
புதிய இணைப்பு
நாட்டின் வானிலை நிலைமைகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் சாத்தியம் காணப்படுவதால், நாளை (18.07.2025) முதல் அடுத்த சில நாட்களில், குறிப்பாக மத்திய மலைகளின் மேற்கு சரிவுப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை, அடுத்தடுத்த வானிலை முன்னறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
முதலாம் இணைப்பு
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department of Meteorology) இன்று (17.07.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை
ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
