வவுனியாவில் அன்னை பூபதிக்கு அஞ்சலி
நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று (16) வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது.
ஈகைச்சுடரினை ஏற்றி
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் தாயார் மலர்மாலை அணிவித்ததை அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அன்னை பூபதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலய முன்றலில் மார்ச் 19 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி உயிர் நீத்தார்.
தியாக தீபம் அன்னை பூபதி உண்ணாவிரதம் ஆரம்பித்த திகதியான மார்ச் 19 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 19 வரை அன்னை பூபதி மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |