மகிந்தானந்தவிற்கு எதிரான பண மோசடி வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு (Mahindananda Aluthgamage) எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மகிந்தானந்தவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்
மகிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் பொரளையில் கின்ஸி வீதியிலுள்ள சுமார் 27 மில்லியன் பெறுமதியான சொகுசு வீட்டை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட நிதி தொடர்பிலான ஆதாரத்தை வெளியிடத் தவறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
[
இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |