மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கான பணம்: புலம்பெயர்ந்தோருக்கு பறந்த அறிவிப்பு
மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்காக அரசியல் கட்சிகளுக்கு புலம்பெயர்ந்தோர் பணங்களை அனுப்ப வேண்டாம் என சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட மாவீரர் குடும்ப கௌரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவினால் இது குறித்த கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை (15) ஆலங்குளத்தில் இடம்பற்றது.
நிகழ்வுகள்
இதையடுத்து, கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் காண்டீபன் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதி மேற்படி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து
அதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு மாவீரர் நாள் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அது அந்த தினத்தில் நடைபெறுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புலம்பெயர் தேசத்தில் உள்ளோர் அரசியல் கட்சிகளுக்கு , மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கென பணங்களை அனுப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |