தமிழர் தலைநகரில் விகாரை அமைப்பு - எதிர்த்து போராட்டம்
Sri Lankan Tamils
Trincomalee
SL Protest
By Sumithiran
திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை அமைக்கும் செயற்பாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழ்த் தேசியப் பேரவை தெரிவித்துள்ளது.
தமிழர்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடும் இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையிலும் சிறி லங்கா தொல்லியல் திணைக்களமும் அரசாங்கமும் இணைந்து திருகோணமலை பெரியகுளம் சந்தியில் விகாரை அமைப்பதை எதிர்த்து போராடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு
இந்த போராட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் அதில் அரசியல் கட்சிகள், குடிசார் அமைப்புக்கள், பொதுமக்கள், அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி